ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியது: வாடிக்கையாளர்கள் அவதி

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சிக்கல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் புதன்கிழமை மாலை முதல் ஏர்டெல் செல்போன் சிக்னல் குறைபாடு ஏற்பட்டது. அலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.

இதையும் படிக்க | கரோனா மூன்றாம் அலையில் கேரளம்: மாநில சுகாதாரத் துறை அமைச்சர்

இந்நிலையில் நெட்வொர்க் குறைபாட்டிற்கு தொழில்நுட்ப சிக்கலே காரணம் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனம் தற்போது சிக்கல் சரி செய்யப்பட்டுவிட்டதாக விளக்கமளித்துள்ளது.

எனினும் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக நெட்வொர்க் எடுக்காகதால் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>