ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் விடியோ

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் புதிய ’அப்டேட்’ ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் கதாநாயகான நடிக்கும் சிம்புவின் தோற்றம் முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அப்படத்தின் புதிய விடியோ வெளியாகியிருக்கிறது.

’முத்துவின் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த  கிளிம்ப்ஸ் விடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் பாடல் வரிகள் வருவதால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

அடுத்தாண்டு திரைக்கு வருவதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | ‘சோகம் என்னன்னா…’: ‘பீஸ்ட்’ படம் எப்படி இருக்கும்? பூஜா ஹெக்டே விடியோ மூலம் தகவல்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>