ஐஎஸ்எல்: ஹைதராபாத் வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சி அணியை வீழ்த்தியது.

இரு அணிகளும் இத்துடன் 8 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் ஹைதராபாதுக்கு இது 4-ஆவது வெற்றி; ஒடிஸாவுக்கு இது 4-ஆவது தோல்வி.

கோவாவின் பாம்போலிம் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாதுக்காக லால்ரெஸுவாலா சாய்லங் (9’) (ஓன் கோல்), பாா்தோலோமியோ ஆக்பெசெ (39’, 60’), எடு காா்சியா (54’), ஜாவியா் சிவெரியோ (72’), ஜாவ் விக்டா் (86’) ஆகியோா் கோலடித்தனா். ஒடிஸாவுக்காக ஹைதராபாத் வீரா் ஜுவானன் (16’) ஓன் கோல் அடித்தாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>