ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

இந்திய திரையலகத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவை மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் இந்த விசா தற்போது நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிக்க | நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு?

இதுகுறித்து அவரது பதிவில், கோல்டன் விசா இன்று துபையில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த முகமது ஷனிட் மற்றும் நண்பர்கள் சொன்னார்கள். ‘விசா’ரித்துப் பார்த்ததில் உண்மை போலவே தோன்றியது.என்று குறிப்பிட்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>