ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் எங்கு நடைபெறும்?: தகவல் அளித்த செளரவ் கங்குலி

 

ஐபிஎல் 2022 போட்டியின் லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிரத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

2021 ஐபிஎல் போட்டி கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முதல் பாதியும் அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்த வருடம் இந்தியாவில் 2022 ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. ஒருவேளை, கரோனா பாதிப்பு மீண்டும் அதிகமானால் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிடும் எனத் தெரிகிறது.  

இந்நிலையில் ஐபிஎல் போட்டி பற்றி பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

இந்த வருட ஐபிஎல் போட்டி இந்தியாவில் தான் நடைபெறும். ஒருவேளை கரோனா பாதிப்பு அதிகமானால் மட்டுமே வேறு திட்டம் உருவாக்கப்படும். ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிரத்தில் – மும்பை, புணேவில் நடைபெறும். பிளேஆஃப் ஆட்டங்கள் எங்கு நடைபெறும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் இந்த வருட மே மாதம் நடைபெறும். வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது வருங்காலத்தில் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெறும். ஐபிஎல் பிளேஆஃப்பின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறும் என்றார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>