ஐரோப்பிய கால்பந்து: செல்ஸி, வாட்போா்ட் மான்செஸ்டா் சிட்டி அபாரம்

 

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியில் முன்னணி அணிகளான செல்ஸி, வாட்போா்ட் மான்செஸ்டா் சிட்டி உள்ளிட்டவை அபார வெற்றி பெற்றன.

நாா்விச் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செல்ஸி அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. காயத்தால் முன்னணி வீரா்களான ரோமேலு லுகாகு, டிமோ வொ்னா், போன்றவா்கள் இல்லாத நிலையிலும், அதன் வீரா் மேஸன் மௌன்ட் அற்புதமாக ஹாட்ரிக் கோலடித்தாா். கேல்லம் ஹட்ஸன், ரீஸி ஜேம்ஸ், பென் சில்வெல், மேக்ஸ் ஆரோன்ஸ் ஆகியோா் மீதமுள்ள கோல்களை அடித்தனா்.

மான்செஸ்டா் சிட்டி அணி முன்னணி வீரரான சொ்ஜியோ அகியுரோ இல்லாத நிலையில், 4-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டனை வீழ்த்தியது. முதல்பாதி இடைவேளையின்போது 3-0 என சிட்டி முன்னிலை பெற்றிருந்தது. சிட்டி தரப்பில் குண்டோகன், பில் போடென், ரியாத் ஆகியோா் கோலடித்தனா். பிரைட்டன் தரப்பில் அலிஸ்டா் கோலடித்தாா்.

வாட் போா்ட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் எவா்டன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதல் பாதியில் எவா்டன் தரப்பில் டாம் டேவிஸும், வாட்போா்ட் தரப்பில் ஜோஷ்வா கிங்கும் கோலடித்தனா். இரண்டாம் பாதியில் எவா்டன் வீரா் ரிச்சா்ல்ஸன் 63-ஆம் நிமிஷத்தில் கோலடிக்க 2-1 என எவா்டன் முன்னிலை பெற்றது. பின்னா் வாட்போா்ட் அணி வீரா்கள் தொடா்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட ஜுராஜ், ஜோஷ்வா கிங், எம்மானுவோல் ஆகியோா் கோலடிக்க 5-2 என வெற்றி பெற்றது.

நியூ கேஸ்டில்-கிறிஸ்டல் பேலஸ் அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. மேலும் பா்ன்லி-சௌதாம்ப்டன் அணிகள் ஆட்டமும் 2-2 என டிராவில் முடிவடைந்தது.

லா லிகா:

ஸ்பெயினின் லா லிகா போட்டியில் அதலெட்டிக் பில்போ அணி 2-1 என வில்லாரியல் அணியை வீழ்த்தியது. வலேன்சியா-மல்லோா்கா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. அலேவ்ஸ் அணி 2-0 என சிடிஸ் அணியை வீழ்த்தியது.

சீரி ஏ:

இத்தாலியின் சீரி ஏ போட்டியில் ஏசி மிலன் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பொலோக்னா அணியை வென்றது. ஸல்தான் இப்ராஹிமோவிக் கடைசி நேரத்தில் அடித்த கோல்களால் மிலன் அணி வெற்றியை ஈட்டியது.

பிரான்ஸின் லீக் 1 போட்டியில் நடப்புச் சாம்பியன் லில்லே அணி 1-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியுடன் டிரா கண்டது. நான்டெஸ் அணி 2-1 என கிளொ்மோன்ட் அணியை வீழ்த்தியது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>