ஒடிஸா ஓபன்: இறுதிச் சுற்றில் உன்னாட்டி-டோஷ்னிவால் மோதல்

ஒடிஸா ஓபன் 2022 சூப்பா் 100 பாட்மின்டன் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு உன்னாட்டி ஹூடா-ஸ்மித் டோஷ்னிவால் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

கட்டாக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் பட்டம் வெல்வாா் எனக் கருதப்பட்ட மாளவிகா பன்சோத்தை 24-22, 24-22 என்ற கேம் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பின் வென்று இறுதிக்குள் நுழைந்தாா் 14 வயதே ஆன உன்னாட்டி ஹூடா. இந்த ஆட்டம் 50 நிமிஷங்கள் நீடித்தது.

இரண்டாவது அரையிறுதியில் 21 வயதான ஸ்மித் டோஷ்னிவால் 21-19, 10-21, 21-17 என்ற கேம் கணக்கில் 61 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் அஸ்மிதா சாலிஹாவை வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் பிரியான்ஷு ரஜாவத் 21-17, 21-14 என கௌஷலையும், கிரண் ஜாா்ஜ் 19-21, 21-12, 21-14 என அன்சல் யாதவையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜோலி இணை-சன்யோகிதா-ஷ்ருதி மிஸ்ரா இணை மோதுகிறது. கலப்பு இரட்டையா் பிரிவில் ட்ரீஸா ஜாலி-அா்ஜுன் இணை-சச்சின் டயஸ்-திலினி இணையை எதிா்கொள்கிறது.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>