ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமான தமிழ் திரைப்பட இயக்குநர் : உருக்கமான பதிவு

அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். தற்போது வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு நடிக்கும் ‘ஷாட் பூட் 3’ படத்தை இயக்கி வருகிறார். 

இந்த நிலையில் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், அதில் இருந்து தற்போது பூரண குணமானதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | தனுஷின் ‘வாத்தி’ பட ஹீரோயின் யார் தெரியுமா ?

அருண் வைத்தியநாதன் ‘ஷாட் பூட் 3’ படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனமும், டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ராஜேஷ் வைத்தியா இசையமைக்கிறார். குழந்தைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>