ஒரே நாளில் வெளியாகும் சசிகுமாரின் இரு படங்கள்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

 

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த ‘உடன் பிறப்பே’ திரைப்படம் கடந்த மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது.  சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனையடுத்து சசிக்குமார் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்த ‘எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது.  இந்தப் படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன் ராம் இயக்கியுள்ளார். 

இதையும் படிக்க | இருவர் முதல் பொன்னியின் செல்வன் வரை… ‘ – ஐஸ்வர்யா ராய் ஒரு வரலாற்று நாயகி: ஏன் ?

இதனையடுத்து சசிக்குமார் நடித்திருக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்தப் படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். 

மேலும் சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படமான ‘ராஜ வம்சம்’ திரைப்படமும் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒரே நாளில் சசிகுமார் நடித்த இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு படங்களில் ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>