ஒளிரும் சருமத்தைப் பெற…பசும்பால்!

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க இயற்கையான பல பொருள்கள் வீட்டிலேயே இருக்கின்றன.

பால் குடித்தால் எலும்புகள் வலுப்பெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், பசும்பால் சருமத்தை மென்மையாக அழகாக வைத்திருக்க உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். 

முகத்தில் சுருக்கங்களை மறைத்து, கருமையை நீக்கி, வறண்ட சருமத்தை பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் ஆகியவற்றை நீக்கி சரும செல்களை புத்துணர்வு அடையச் செய்கின்றன. 

இதையும் படிக்க | கரோனா 3-வது அலையிலிருந்து தப்பிக்க…என்னென்ன செய்ய வேண்டும்?

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை காக்க, பலரும் செயற்கையான மாய்சரைசர்களை பயன்படுத்திவரும் நிலையில் இயற்கையான ஒரு மாய்சரைசராக பால் இருக்கிறது. 

► சூரிய ஒளியினால் ஏற்படும் கருமையைத் தவிர்க்க வாரம் ஒருமுறை குளிக்கும் நீரில் பால் கலந்து குளித்து வரலாம்.

► தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் முகத்தில் பாலை தடவி வர சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும். காய்ச்சாத பாலை நேரடியாகவும் பயன்படுத்தலாம். 

► இளஞ்சூடான  பாலுடன்  ஒரு தேக்கரண்டி  தேனைக் கலந்து  முகம் மற்றும் கழுத்துப்  பகுதிகளில்  பூசி பத்து  நிமிடங்கள் கழித்து  கழுவினால்  முகம் பளபளப்பாகும்.

► பாலுக்கு பதிலாக தயிரையும் முகத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவைத்து கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கும். 

► காய்ச்சாத பாலை பஞ்சில் சில துளிகள் ஊற்றி முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் முகம்  பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

► பாலுடன்  சில துளிகள்  கிளசரின்  மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்தும் முகத்தில் பூசலாம். 

► கேரட் அல்லது ஆரஞ்சு சாறுடன் சில துளிகள் தேன் மற்றும் பால் கலந்து பேக் போடலாம். இதுவும் சரும அழகைக் கூட்டும். 

► வாழைப் பழத்தை  கூழாக்கி  அதனுடன் பால், தேன் கலந்து பூசி வர சருமம் பொலிவு பெறும். 

► உருளைக்கிழங்கை அரைத்து அத்துடன் பால் சேர்த்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். 

இதையும் படிக்க | பஃபே உணவகங்களில் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>