ஓடிடியில் புஷ்பா: வெள்ளியன்று வெளியாகிறது

 

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. 

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, ஃபஹத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் – புஷ்பா. இசை – தேவி ஸ்ரீ பிரசாத். ஊ சொல்றியா பாடலால் இந்திய அளவில் கவனம் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் அமோக வசூலை அடைந்து பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் அல்லு அர்ஜுனின் புகழ் மேலும் கூடியுள்ளது.

இந்நிலையில் புஷ்பா படம் ஜனவரி 7 இரவு 8 மணி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>