ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…: புதுப்பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

பிரபல இயக்குநர் பாலாவுடன் இணையும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் சூர்யா.

2001-ம் வருடம் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் – நந்தா. சூர்யாவைச் சிறந்த நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திலிருந்துதான். பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து சூர்யா நடித்தார். அவன் இவன் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார். 

2016-ல் தாரை தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, 2018-ல் நாச்சியார் படத்தை இயக்கினார். 2020-ல் பாலா இயக்கிய வர்மா படம் ஓடிடியில் வெளியானது. 

இந்நிலையில் இயக்குநர் பாலாவுடனான புதுப்பட அறிவிப்பை அழகிய புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் சூர்யா. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>