ஓர் இறைத் தத்துவ 'ஹஜ்' பெருநாள்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 12

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஈராக் நாட்டில் தோன்றியவர் ஏப்ரஹாம் என்றழைக்கப்படும் நபி இப்ராஹீம் அவர்கள். இவரை ஓர் இறை தத்துவத்தை உலகுக்குப் போதித்த மாபெரும் தீர்க்கதரிசியாகக் கருதிப் போற்றுகின்றனர்.