கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை: மத்திய அரசு தகவல்

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 4177 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நடப்பு நிதியாண்டின் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று குடியுரிமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இதையும் படிக்க | நாளை (டிச.1) அதிமுக செயற்குழுக் கூட்டம்

அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 4177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு 1106 பேருக்கும். 2017ஆம் ஆண்டு 817 பேருக்கும், 2018ஆம் ஆண்டு 628 பேருக்கும், 2019ஆம் ஆண்டு 987 பேருக்கும், 2020ஆம் ஆண்டு 639 பேருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் 2017ஆம் ஆண்டு 1 லட்சத்து 33 ஆயிரத்து 49 பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர். இவை முறையே 2018ஆம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 561 பேரும், 2019ஆம் ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரத்து 17 பேரும், 2020ஆம் ஆண்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 297 பேரும் தங்களது இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>