கணைய நோய்களா? கவலை வேண்டாம்!

கணையம் எனும் உறுப்பு மனித உடலின் வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாகவும், மிகச் சிக்கலான இடத்திலும், முன் சிறுகுடலுக்கு சற்று இடது புறத்திலும் அமைந்துள்ளது. இதன் நீளம் 15-20 செ.மீ. எடை 85 -100 கிராம். கணையம் என்பது ஒரு கலப்படச் சுரப்பி. EXOCRINE மற்றும் ENDOCRINE எனும் இரண்டு சுரப்பிகளாலும் ஆனது. பல நூறு பைகளைக் கொண்டது இது.

கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ எனும் சிறப்புத் திசுக்கள்  பரவிக் கிடக்கின்றன. ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் 10 லட்சம் திட்டுகள் உள்ளன.  ஒவ்வொரு திட்டிலும் 3000 முதல் 4000 வரை ஆல்பா, பீட்டா, டெல்டா என்று 3 வகை செல்கள் உள்ளன. ‘பீட்டா’  செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்கான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும்  சுரக்கின்றன. 

கணையத்தின் முக்கியமான பணி அன்றாடம் உட்கொள்ளும் உணவினைச் செரித்து உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுகளுக்கு மாற்றிக் கொடுப்பதாகும். இதன் ஒரு சதவிகித வேலையால் உருவாகும் இன்சுலின் குறைபாட்டினால் தான் நீரழிவு எனும் சர்க்கரை வியாதி உண்டாகிறது.

நாம் எந்தவித உணவுகள் சாப்பிட்டாலும் அவை இறுதியில் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாகவும், கிளிசரினாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றப்பட்டால் மட்டுமே உடல்திசுக்கள் அவற்றை எரித்துச் சக்தியைப் பெற முடியும்.

டிரிப்ஸின், அமைலேஸ் மற்றும் லிப்பேஸ் எனும் மூன்று என்சைம்களைக் கணையம் உற்பத்தி செய்கிறது. இவை முறையே புரோட்டின்களை அமினோ அமிலங்களகவும், ஸ்டார்ச்சை சர்க்கரையாகவும், கொழுப்பினைக் கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றுகின்றன.

கணையத்திற்கும், கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகிய உறுப்புகளுக்கும் பொதுவான ஒரு வெளியேற்றும் குழாய் [CBD-COMMON BILE DUCT] உண்டு. இதன் காரணமாக சில நேரங்களில் கல்லீரலில் உள்ள பித்த நீர், கணையத்திற்குள் இந்த வழியாகச் சென்று, கணையத்தைச் சேதப்படுத்துவதும் உண்டு.

அதே போல, பித்தப்பைக் கற்கள் கணையத்தின் குழாயை அடைத்து விடுவது உண்டு. இதனால் கணைய நீர் மீண்டும் கணையத்திற்குள்ளேயே திரும்ப வந்து அந்த உறுப்பையே செரித்து அரித்து விடும் அபாயமும் உண்டு. கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தேங்குமானால், கணையத்தையே  அழித்துவிடக் கூடியவை. இக்காரணங்களாலேயே கணையத்தில் அழற்சி தோன்றுகிறது.

இன்றைய பெரும்பாலான உணவுகளில் ருசிக்காக, அழகுக்காக வண்ணங்கள், ரசாயனப் பொருட்கள், மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. இவைகளால் உடலுக்குப் பெருந்தீங்குகள் ஏற்படுகின்றன. இவற்றை விரும்பி உண்போருக்கு கணையக் கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். பலவித ஆங்கில மருந்து மாத்திரைகளின் பின்விளைவுகளாகவும் கணையக் கற்கள் உருவாகின்றன. கணையக் கற்கள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் SECONDARY DIABETES ஏற்படுகிறது. இப்பிரச்னைகளோடு கணையத்தில் பல்வேறு கட்டிகள் வரும் வாய்ப்பும் உண்டு. அதிக மது, புகைப் பழக்கமுள்ளவர்களுக்கு கணையப் புற்று ஏற்படக்கூடும். புற்று நோய்களில் இது கடுமையானது; கொடுமையானது. பலரும் விரைவில் மரணத்தைச் சந்திக்க நேர்கிறது.

சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிப்பதால் கணையம் பாதிக்கப்படலாம்.  பரம்பரைக் கோளாறுகள், புற்றுநோய், ரத்த ஓட்டக் குறைபாடுகள், விஷக்கடிகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றாலும் கணையம் பாதிக்கப்படலாம்.

இரைப்பைப் புண் இருப்பவர்களுக்கு ஏற்படுவது போன்ற வயிற்று வலி கணைய நோயிலும் காணப்படும். குமட்டல் வாந்தியும் காணப்படும். அல்சர் வயிற்றுவலி வாந்திக்குப் பின் குறைந்துவிடும். கணைய நோயில் வாந்திக்குப் பின்னரும் வலி குரையாது. இந்த வலி மேல் வயிற்றில் ஆரம்பிக்கும். பின்பு முதுகுப் பக்கத்துக்குப் பரவும்.  சிலருக்குத் தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம். முன்பக்கமாக சாய்ந்து உட்கார்ந்தால் வலி சிறிது குறையும். படுத்தால் வலி அதிகரிக்கும்.வயிற்று உப்புசம் ஏற்படும் 

ஒரு காலத்தில்  கணையத்தில் கோளாறு என்றாலோ, ஆபரேஷன் என்றாலோ மரணம் உறுதி என்று கருதப்பட்டது. இன்றைய நிலையிலும் அலோபதியைப் பொறுத்தளவில் கணையக் கற்களை ஆபரேஷன் மூலம் வெளியேற்றுவது அல்லது அதிர்வு அலைகள் மற்றும் லேசர் கதிர்களைக் கொண்டு உடைத்து வெளியேற்றுவது சிக்கலான ஆபத்தான செயலாகவே உள்ளது.

கணையப் புற்றின் முற்றிய நிலைத் தவிர இதர கணைய நோய்களுக்கு ஆபரேஷனின்றி குணப்படுத்த ஹோமியோபதியில் அரிய மருந்துகள் உள்ளன. ஹோமியோபதி சிகிச்சை மூலம், கணைய நோயால் பாதிக்கப்பட்டவரை முழுமையாக ஆய்வு செய்து மருந்துகள் அளிக்கப்பட்டால் பெருமளவு நிவாரணமோ, முழு நலமோ பெறமுடியும்.

கணைய நோய்களுக்குப் பயன்படும் சில முக்கிய மருந்துகளாவன;

பெல்லடோனா [BELLADONNA] – கணைய அழற்சி [INFLAMMATION OF PANCREAS]

அகிரந்தஸ் / பெல்லடோனா – தீவிர ரத்தக் கசிவுடன் கணைய அழற்சி [ACHYRANTHES CALEA  / BELLADONNA]

சியோனாந்தஸ் [CHIONANTHUS-Q] – கல்லீரல் உபாதைகளுடன் கணைய அழற்சி

கல்கேரியா கார்ப் [CALCAREA CARB] – கணைய வீக்கம் [ENLARGEMENT]

புடிரிக் ஆசிட் [BUTYRIC ACID] – கணையக் கட்டி [PANCREAS FIBROCYSTIC]

ஃபிராகரியா [FRAGARIA VESCA–Q] – கணையக் கற்களை வெளியேற்ற

ஐரிஸ் வெர்ஸ் [IRIS VERS] – வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுப் போக்கு, அமிலச் சுரப்பு [ACIDITY], பித்தநீர் உட்பாய்தல் போன்ற பல குறிகளுடன் கணைய வேக்காடு மற்றும் கணைய நோய்கள் .

பாஸ்பரஸ் [ PHOSPHORUS ]அதிக  ரத்தப்பெருக்குடன் கணையப் புற்று, எண்ணெய் பிசுக்குடன் மலம் கழித்தல்.

Dr.S.வெங்கடாசலம், மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் / Cell : 94431 45700/ Mail : alltmed@gmail.com

<!–

–>