கத்ரினா கைப்பின் திருமண விடியோ 100 கோடிக்கு விற்பனை?

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினா கைப்பின் திருமணம் நாளை (டிச.9) நடைபெற இருக்கிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரினா கைப் விக்கி கௌஷல் என்பவரை நாளை(டிச.9) திருமணம் செய்ய இருக்கிறார்.

மிகப் பெரிய பொருட்செலவில் நடக்கும் இந்தத் திருமணத்தில் இந்தியாவின் முக்கிய சினிமா பிரபலங்கள் , தொழிலதிபர்கள் , அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள புராதான கோட்டை ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்தின் விடியோவை பதிவு செய்து வெளியிட பிரபல ஓடிடி முன் வந்திருப்பதாகவும் அதற்காக ரூ.100 கோடிக்கு கத்ரினாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் , தற்போது திருமணம் நடக்கவிருக்கும் கோட்டையில் கத்ரினா தங்கியிருக்கும் அறையின்  ஒரு நாள் வாடகை ரூ.6 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>