கனமழை எச்சரிக்கை: தலைமை செயலர் ஆலோசனை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலர் வெ.இறையன்பு துறை செயலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வங்கக்கடல் இருந்து நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறை செயலர்களுடன் தலைமை செயலர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>