கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

கன்னட திரைப்பட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முதற்கட்ட தகவல்கள் அவரக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆபத்தான நிலையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவியதால் அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை, 7.33 மணிக்கு, தனது சகோதரரும், கன்னட நடிகருமான ஷிவா ராஜ்குமார் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி 2 படம் குறித்து தனது வாழ்த்துகளை புனித் ராஜ்குமார் சுட்டுரையில் வெளியிட்டிருந்தார்.

இதையும் படிக்கலாமே.. சுஜித் பிறக்கும் முன்பே சவக்குழி தோண்டியது யாரோ?

பஜ்ரங்கி 2 படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்துகளை வெளியிட்டு ஒரு சில மணி நேரத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியது.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>