கப்தில் அதிரடி: நியூசிலாந்து 164 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்துள்ள நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது. முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் ஸ்விங் பந்தில் மிட்செல் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.

இதையும் படிக்கடபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் அபார சதமடித்து இந்தியாவின் மந்தனா சாதனை

இதன்பிறகு, கப்திலுடன் இணைந்த மார்க் சாப்மேன் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இருவரும் நிதானம் காட்ட, முதல் 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, இருவரும் படிப்படியாக அதிரடிக்கு மாறி ரன் ரேட்டை உயர்த்தினர். சாப்மேன் 45-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டிய நேரத்தில் சாப்மேன் 63 ரன்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் முகமது சிராஜ் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட கப்தில் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.  தொடர்ந்து அதிரடி காட்டி வந்த அவர் ரன் ரேட்டை உயர்த்த, அணியின் ரன் ரேட் ஓவருக்கு 8.5-ஐ நெருங்கியது. தீபக் சஹார் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய அவர் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழந்தார். தொடர்ந்து டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால், கடைசி கட்டத்தில் அதிரடி இல்லாமல் நியூசிலாந்து திணறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணித் தரப்பில் புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், தீபக் சஹார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>