கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5இல் ராஜு, பாவ்னி, பிரியங்கா, அக்‌ஷரா, இமான் அண்ணாச்சி, வருண், அபினய், தாமரை செல்வி உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி 50 நாட்களை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் அபிஷேக், அமீர், சஞ்சீவ் ஆகிய மூன்று பேரும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 5வது சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல்ஹாசனுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனை முடிவில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. சமூக ஊடகங்களில் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகை ஷுருதி ஹாசன் ஆகியோரில் யாரேனும் தொகுத்து வழங்கவுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஷுருதி ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், எனது அப்பாவின் உடல் நலம்பெற பிராத்னை செய்த அனைவருக்கும் நன்றி. அவர் விரைவில் உங்களுடன் கலந்துரையாட காத்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி வாயிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>