கமல்ஹாசனின் விக்ரம்: பிறந்த நாள் பரிசாக படக்குழு வெளியிட்ட விடியோ

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் நாளை (நவம்பர் 7) கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்தப் படத்தில் இருந்து கிளான்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | ‘தலைவா’ என்று கத்தியபடி மகனுடன் ‘அண்ணாத்த’ படத்தை ரசித்த ஷாலினி

இந்த விடியோ விக்ரம் படம் குறித்து நாம் அறிந்துகொள்ள உதவும் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவில் சிறைச்சாலை ஒன்று காட்டப்படுகிறது. எதிரிகள் கமலை துப்பாக்கியால் சுட அவர் தடுப்பு ஒன்றைப் பயன்படுத்தி தப்பிப்பது போல் காட்டப்படுகிறது. பின்னணியில் விக்ரம் இசை ஒலிக்க பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>