கம்பு மாவு தோசை 

தேவையானவை: 
கம்பு மாவு – 2 கிண்ணம்
உளுந்து – அரை கிண்ணம்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: உளுந்தையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, மறுநாள் சற்று கனமான தோசைகளாக வார்க்கவும் (தோசை வார்ப்பதற்கு முன் கரைத்த மாவில் அரை தேக்கரண்டி எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்). இதற்கு தொட்டுக் கொள்ள கார சட்னி ஏற்றது.

– கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>