கரோனா பரிசோதனை கட்டாயமில்லை: அகில இந்திய டென்னிஸ் சங்கம்

 

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) கூறியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என ஏஐடிஏ முன்பு கூறியிருந்தது. இப்போது தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

ஏஐடிஏ போட்டிகளில் கரோனா பரிசோதனை குறித்து ஒரு தகவல். 2021, நவம்பர் 22 முதல் ஏஐடிஏ போட்டிகளில் கரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை. வெப்ப நிலை பரிசோதனை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை டென்னிஸ் நடக்கும் பகுதிகளில் அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம் வீரர், பயிற்சியாளர், பெற்றோர் என யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அவர்களிடம் கரோனா பரிசோதனை சான்றிதழ் கேட்கும் அதிகாரம் போட்டியின் இயக்குநருக்கு உள்ளது என்று ஏஐடிஏ ட்விட்டரில் கூறியுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>