கரோனா பாதிப்பு: மே.இ. தீவுகள் – அயர்லாந்து ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு

 

மே.இ. தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 1 டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது அயர்லாந்து அணி.

முதல் ஒருநாள் ஆட்டத்தை மே.இ. தீவுகள் அணி வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் ஜமைக்காவில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கெனவே இரு அயர்லாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடாத நிலையில் மேலும் மூன்று அயர்லாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் இருவர் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்கள். மேலும் இரு அயர்லாந்து வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்வதில் அயர்லாந்து அணிக்குச் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒருநாள், டி20 தொடர்களைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பான முடிவை இரு அணி கிரிக்கெட் வாரியங்களும் விரைவில் எடுக்கவுள்ளன. 

சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது அயர்லாந்து. அப்போது அயர்லாந்து அணியின் பணியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என சமன் செய்தன.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>