கர்ப்பப்பை கட்டிகளா? ஆபரேசனைத் தவிர்க்கலாம்!

பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்ற பின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும்  அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. கர்ப்பப்பையைத் தாக்கும் பொதுவான நோய்களில் ஒன்றே ஃபைப்ராய்டு எனப்படும் கட்டி.

இன்று உலகளவில் கர்ப்பப்பை கட்டி பாதிப்புடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது பற்றிய போதிய விழிப்பின்மை, அறிவின்மை காரணமாக பெரும் சிரமத்திற்கும் துயரத்திற்கும் பெண்கள் ஆளாகின்றனர். இதனை புற்றுநோய்க் கட்டி என்றெண்ணி மன உளைச்சலில் வீழ்கிறார்கள்.

கர்ப்பப்பைக் கட்டிகள் இரண்டு வகைப்படும்.1.FIBROIDS எனப்படும் நார்த்திசுக் கட்டிகள் 2.MALIGNANT TUMOURS எனப்படும் புற்றுநோய்க் கட்டிகள். FIBROID என்பது லத்தீன் & கிரேக்கச் சொற்சேர்க்கை. FIBRA  என்பதன் பொருள் [FIBRE] நார்; EIDOS என்பதன் பொருள் [FORM]  உருவம். கர்ப்பப்பையில் தோன்றும் கட்டிகளில் நார்த்திசு கட்டிகளே அதிகம் ஆக்கிரமிக்கின்றன. இவை எப்போதும் தீங்கு விளைவிக்காத BENIGN TUMOURS எனப்படுகின்றன. இவை பொதுவாகப் புற்றுநோயாக மாற வாய்ப்பு இல்லை.0.5 சதவீதம் மட்டுமே [1 சதவிகிதத்திற்கும் குறைவாக] புற்றுக்கட்டியாக மாற வாய்ப்புள்ளது

கர்ப்பப்பையில் நார்த்திசுக் கட்டிகள் கர்ப்பப்பையின் உட்சுவர், நடுச்சுவர் மற்றும் வெளிச்சுவர் பகுதிகளில் தோன்றுகின்றன. வெளிச்சுவர் மற்றும் நடுச்சுவர் பகுதிகளில் தோன்றும் கட்டிகள் மகப்பேற்றில் தொந்தரவு கொடுப்பதில்லை. உட்சுவரில் தோன்றும் கட்டிகளால் கரு வெளியேற்றப்படும் நிலையும், அதன் விளைவாக குழந்தையின்மையும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கர்ப்பப்பை கட்டிகள் வட்ட வடிவத்தில் அல்லது முட்டை வடிவத்தில் காணப்படுகின்றன. சிறு பட்டாணி அளவு முதல் ஒரு தேங்காய் அளவு வரை [1 மி.மீ. முதல் 20 செ.மீ. வரை] வெவ்வேறு அளவுகளில் ஒன்றாக அல்லது பலவாக [SOLITARY OR MULTIPLE] வெவ்வேறு எண்ணிக்கையில் வளர்ந்து கர்ப்பப்பையின் உருவ அமைப்பையே மாற்றக்கூடும். இக்கட்டிகள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன.

1.SUBMUCUS FIBROIDS : கர்ப்பப்பையின் உட்சுவரில் [ENDOMETRIUM] வளரக் கூடியது. கரு எங்கே வளருமோ அங்கே கட்டிகள் வளர்வதால் அதிகளவு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் FALLOBIAN TUBE எனப்படும் கருக்குழாயினை அழுத்தும் நிலை ஏற்படுவதால் மலட்டுத்தன்மை [INFERTILITY] ஏற்படக்கூடும். அதிகளவு மற்றும் அதிக நாட்பட்ட மாதப் போக்கு ஏற்படக்கூடும். இரண்டு மாதவிடாய் காலங்களுக்கு இடையிலும் மாதப்போக்கு ஏற்படக்கூடும்.

2. SUBSEROUS FIBROIDS; கர்ப்பப்பைக்கு வெளியே தோன்றக் கூடியது. வெளிப்பகுதி கட்டி என்பதால் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இராது. இருப்பினும் இதன் அருகிலுள்ள சிறுநீர்ப்பை உள்ளிட்ட வயிற்றுப் பாகங்கள் அழுத்தப்படும்.

3. INTRAMURAL FIBROIDS; கர்ப்பப்பையின் உள், வெளிச் சுவர்களுக்கு இடையில் அமைந்துள் நடுப்பகுதியில் தோன்றக் கூடியது. இங்கு தோன்றும் கட்டிகளால் கர்ப்பப்பை விரிவடையும்; கர்ப்பம் தரித்துள்ளாரோ எனச் சந்தேகிக்கும் அளவிற்கு எடை அதிகரிக்கும். 5 செ.மீ.அளவிற்கு மேல் வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். இந்தக் கட்டிகளின் அழுத்தம் காரணமாக வயிற்றுத் தொந்தரவுகளும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்படும்.

4. PEDUNGULATED FIBROIDS; கர்ப்பப்பையின் உள்சுவர் மற்றும் வெளிச்சுவர் இரு பகுதிகளிலும் தொங்கு நிலையில் வளரக் கூடியது. இவை மெல்லிய தண்டுடன் [STALK] தொங்கிக் கொண்டிருக்கும்.

முதல் மாதவிடாய் துவக்க காலத்திலிருந்து மாதவிடாய் முற்றுப் பெறும் காலம் வரை எந்த வயதிலும் கட்டிகள் தோன்றலாம். மாதவிடாய் நடைபெறும் பெண்களில் 40%, குழந்தை பெறாத பெண்களில் 30% குழந்தை பெற்ற பெண்களில் 20%, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்ற பெண்களில் 40%, முதிர்கன்னிகளில் 10% இக்கட்டிகள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வயதுக்கு வராத பெண்களிடமும், 20 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களிடமும் நார்த்திசுக் கட்டிகள் தோன்றுவதில்லை. பொதுவாக இக்கட்டிகள் மெதுவாக வளரும் தன்மை உள்ளவை. மாதவிடாய் முற்றுக்குப் [MENOPAUSE] பின் ஹார்மோன் அளவுகள் குறைவதால் கட்டிகள் தானாகச் சுருங்கிவிடும்.

காரணங்கள் : 1.ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம். 2. பத்து வயதிற்குள் பூப்படைதல் – முதல் மாதவிடாய் தொடங்குதல் 3. குடும்ப வரலாறு 4. நாள்பட்ட கர்ப்பப்பைத் தொற்று மற்றும் மிகை ரத்த அழுத்தம் 5. அடிபடுதல், விபத்து காரணங்களால் கர்ப்பப்பை காயமடைந்ததன் பின்விளைவாக 6. மணமாகாத முதிர்நிலை 7. கருத்தடை மாத்திரைகள் [ORAL CONTRACEPTIVES] தொடர்ந்து உபயோகித்தல். 8. மரபணுக் கூறுகளில் மற்றங்கள் 9. மது அருந்துதல்..குறிப்பாக பீர் அருந்துதல். 10. பல முறை கருச்சிதைவு.

உளவியல் காரணங்கள் [PSYCHOLOGICAL FACTORS] : FIBROID கட்டிகள் பாதித்த பெண்கள் சிலரை ஹிப்னாடிச முறையில் ஆய்வு செய்த மருத்துவ அறிஞர்கள் சில முக்கிய மனவியல் காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளனர். 1. பாலியல் உறவில் திருப்தி குறைபாடு. 2. பாலியல் முறைகேடுகளால் பாதிப்பு. 3. மணமுறிவுகள் 4. விரும்பத்தகாத கர்ப்பங்கள் 5. சுய வெறுப்பு, எனவே நார்த்திசுக் கட்டிகளுக்கான காரணங்கள் பெண்ணின் உடலிலா மனதிலா என்பதையும் கண்டறிவது அவசியமாகிறது.

அறிகுறிகள் : சிறியளவிலான கட்டிகளால் எந்த பாதிப்பும் இல்லை. பெரிய அளவிலான கட்டிகளால் இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகள் அழுத்தப்படும். இதனால் அடிவயிற்று வலி அல்லது அடிமுதுகு வலி ஏற்படும். சிறுநீர்ப்பை அழுத்தப்படுவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். உடலுறவில் வலி ஏற்படும். மாதப்போக்கு அதிகளவிலும் கட்டிகட்டியாகவும் வெளிப்படும். இதன் விளைவாக ரத்த சோகை ஏற்படும். சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் சுருக் சுருக் என்று தைப்பது போன்று வலி உண்டாகும். அந்த வலி பிரசவ வலி போன்று கடுமையாக இருக்கும். சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும்.

ஹோமியோபதி சிகிச்சை : ஹோமியோபதி மருந்துகள் எவ்வாறு பணியாற்றுகின்றன? எவ்வாறு கட்டிக்களைக் கரைத்துக் குணமாக்குகின்றன? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.1.கட்டிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை குறைத்தல் [REDUCING BLOOD FLOW TO THE TUMOUR] மூலம் கட்டியின் வளர்ச்சி தடைபட்டுச் சுருங்குகிறது. 2. கட்டிகளுக்குச் செல்லும் ரத்தம் முழு அளவில் நிறுத்தம் [BLOCKING THE BLOOD FLOW] காரணமாக FIBROID கட்டி முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ ஒரு சில மாத காலத்திற்குள் அழிந்து போகிறது.

மேலும் ஹோமியோபதி சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணை முழுமையாக ஆய்வு செய்து முழுமைத்துவம் [TOTALITY] அடிப்படையில் மருந்து தேர்வு செய்வது என்பது முதன்மையான பரிந்துரையாக மதிக்கப்படுகிறது. மேலும் ஹோமியோபதி மருந்துகளில் பக்கவிளைவுகள் இல்லை என்பது உலகறிந்த உண்மை. நீண்ட காலம் எடுத்தாலும் எவ்வித தீமையுமில்லை. 100% பாதுகாப்பானது. கர்ப்பப்பை நார்த்திசுக் கட்டிகளைக் கரைக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட மருந்துகள் உள்ளன. இம்மருந்துகள் மூலம் தேவையற்ற அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்கலாம். AURUM MET, AURUM MUR NATRUM, CAL CARB, FRAXINUS, LACHESIS, SILICA, CAL FLOUR, PHOS,CONIUM, THUJA  போன்ற மருந்துகள் அதிகளவில் பயன்படக் கூடியவை.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்

Cell : 94431 45700 , Mail : alltmed@gmail.com

<!–

–>