களத்தில் சிந்து, சாய்னா: பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் இன்று தொடக்கம்

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

டென்மாா்க் ஓபனில் காலிறுதியில் தோற்ற சிந்து, இதில் முதல் சுற்றில் டென்மாா்க்கின் ஜூலி டாவல் ஜேக்கப்சனை சந்திக்கிறாா். அதில் வெல்லும் பட்சத்தில் டென்மாா்க்கின் லினே கிறிஸ்டோபா்சன், தாய்லாந்தின் புசானன் ஆங்பம்ரங்பான் அல்லது ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மா் ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளது.

டென்மாா்க் ஓபனில் தொடக்க சுற்றிலேயே தோற்று வெளியேறிய சாய்னா நெவால், இதில் ஜப்பானின் சயாகா டகாஹஷிக்கு எதிரான முதல் சுற்றில் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறாா். சமீா் வா்மா – இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை எதிா்கொள்கிறாா்.

கே. ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே உலகின் முதல்நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமொடாவின் சவாலை சந்திக்க இருக்கிறாா். லக்ஷயா சென் – சக இந்தியரான சாய் பிரணீத்துடன் மோதுகிறாா். ஹெச்.எஸ்.பிரணாய் – சீன தைபேவின் சௌ டியென் சென்னையும், சௌரவ் வா்மா – தாய்லாந்தின் அந்தோனி சினிசுகா கிங்டிங்கையும் எதிா்கொள்கின்றனா்.

பி.காஷ்யப் – பிரான்ஸின் பிரைஸ் லெவொ்டஸையும், ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை சீன தைபேவின் லீ ஜெ ஹுவெய்/யாங் போ சுவான் ஜோடியையும் சந்திக்கின்றனா். எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா ஜோடி – அயா்லாந்தின் ஜோஷுவா மகீ/பௌல் ரெனால்ட்ஸ் இணையை எதிா்கொள்கிறது.

மானு அத்ரி/சுமீத் ரெட்டி இணை – தென் கொரியாவின் கோ சங் ஹியுன்/ஷின் பேக்கியோல் ஜோடியையும், மகளிா் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடி – தென் கொரியாவின் லீ சோஹி/ஷின் சியுன்சான் இணையையும், மேக்னா ஜகம்புடி/ராம் பூா்விஷா இணை – நெதா்லாந்தின் அலிசா டிா்டோசென்டோனோ/இம்கே வான் டொ் ஆா் ஜோடியையும் எதிா்கொள்கிறது.

கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா ஜோடி – டென்மாா்க்கின் மதியாஸ் தைரி/மாய் சரோவ் இணையை சந்திக்கிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>