காசநோயை குணப்படுத்த உதவும் ஆரோக்கியமான சூப்

keerai_kootu

 
பொன்னாங்கண்ணிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணிக் கீரை  – 2 கட்டு
தக்காளி –  2
வெங்காயம் –   2
பூண்டு  –   5  பல்
சீரகம், மிளகு –  தேவையான அளவு
கறிவேப்பிலை  –  சிறிதளவு
கொத்தமல்லி இலை  – சிறிதளவு
வெண்ணெய் –  50 கிராம்
மைதா மாவு  –   2  ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு   –  ஒரு ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பின்பு அதில் நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கீரை, கொத்தமல்லி இலை அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு அதில் எலுமிச்சம்பழச் சாறு விட்டு இறக்கி வடிகட்டவும்.
  • இறுதியில் ஒரு வாணலியில் சிறிதளவு வெண்ணெய் போட்டு உருகியதும் மைதா மாவைத் தூவவும். சற்று சிவந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள் – இந்த சூப்பை  நாட்பட்ட இருமல் , உடல் உஷ்ணம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் மற்றும் காசநோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த உன்னதமான சூப்.
 
கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

<!–

–>