கார்த்தியின் 'விருமன்' படத்தில் இணையும் விஜய் டிவி பிரபலம்

கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தியும் இயக்குநர் முத்தையாவும் இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர். 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இன்தப் படத்துக்கு இசையமைக்கின்றார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். 

இதையும் படிக்க | அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ – தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்குமா? திரை விமர்சனம்

இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்த மைனா நந்தினி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இவரது வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>