காவல் துறையின் பழைய அடியாளா? பா. ரஞ்சித்தின் ரைட்டர் டீசர் வெளியானது

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டீசர் இன்று (திங்கள்கிழமை) வெளியானது.

இயக்குநர் பா. ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த பிராங்க்ளின் ஜேக்கப், ரைட்டர் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரகனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் படத்தைத் தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காவல் துறையில் நடக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி ஒரு ரைட்டரின் ஊடாக இந்தக் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

டீசர்: 

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையின் தொடக்கப் புள்ளி, தலைப்பு, காவல் துறை பற்றிய பார்வை உள்ளிட்டவை குறித்து இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் கூறியிருப்பதை விரிவாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்..

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>