காவிரிப் பாசன பகுதிகளில் கனமழை: மழை நீரில் மூழ்கிய நெல்வயல்கள்!

எடப்பாடி: சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, காவிரிப் பாசன பகுதிகளான பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கொட்டிய மிக கனமழையால் அங்குள்ள நெல்வயல்கள் மழை நீரில் மூழ்கியது.

விடிய விடிய கொட்டிய கனமழை
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, மோளப்பாறை உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்தது. நீண்ட நேரம் பெய்த கன மழையால் இப்பகுதியிலுள்ள வயல்வெளிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

பூலாம்பட்டி பகுதியில் மேட்டூர் பிரதான சாலையில் மழைநீர் ஆறாக ஓடி வரும் காட்சி

கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் ஏற்கனவே நெல் வயல்களில் கூடுதலான அளவில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், தற்போது கொட்டிய கன மழையால் பெரும்பாலான நிற்பவர்கள் மூழ்கி விடும் அபாய நிலை உருவாகியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | ஒமைக்ரானால் தென் ஆப்பிரிக்காவில் 4-ஆவது கரோனா அலை

சாலையில் ஆறாக ஓடிய மழை நீர்
பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலையில் பல்வேறு இடங்களில் சாலையை நூல் கடித்தவாறு மழைநீர் ஆறாக ஓடியது இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க | சிமென்ட் மூட்டை விலை ரூ.400-ஐ தொடும்: கிரிசில் கணிப்பு

மேலும் பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவிரி வடிநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்வகைகள் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மழை பாதிப்புகள் குறித்து அப் பகுதியில் முகாமிட்டுள்ள வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>