கிரெம்ளின் கோப்பை: கொண்டவெயிட் சாம்பியன்

 

கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கொண்டவெயிட் சாம்பியன் பட்டம் வென்றாா்.

மாஸ்கோவில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரோவாவும்-கொண்டவெயிட்டும் மோதினா். இதில் முதல் செட்டை 6-4 என அலெக்சாண்ட்ரோவா கைப்பற்றினாா். இதன்பின்னா் சுதாரித்து ஆடிய கொண்டவெயிட் அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றினாா்.

மூன்றாவது செட்டில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் 7-5 என கைப்பற்றி பட்டத்தையும் கைப்பற்றினாா் கொண்டவெயிட்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் காரட்சேவ்-மரின் சிலிக் ஆகியோா் மோதுகின்றனா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>