குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை ஆராயக் குழு அமைத்த தமிழக அரசு

சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை ஆராயக் குழு அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் 1997-இல் கட்டப்பட்ட 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதையும் படிக்க | நீட் தேர்வு விலக்கு: அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்பிக்கள்

விரிசல் காரணமாக குடியிருப்புவாசிகள் கட்டடம் இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டதால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | மருத்துவர்கள் மீது தாக்குதல்: காவல் துறைக்கு முதல்வர் கண்டனம்

இந்நிலையில் சென்னையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குடியிருப்புகளின் கட்டுமான தரத்தை மதிப்பீடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>