குத்தாட்ட விடியோவை பகிர்ந்து ரசிகர்களை போட்டுத்தாக்கிய ஷிவானி: வைரலாகும் விடியோ

நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறார். தினமும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிர்வதை மட்டும் அவர் தவறுவதேயில்லை.

தற்போது அவர் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து வழக்கம்போல ரசிகர்கள் ஷிவானியின் விடியோவுக்கு அவரது அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க | விடியோ: ”நான் சமந்தாவாகப் போறேன்”: சமந்தாவின் குட்டி ரசிகையைக் கலாய்க்கும் கீர்த்தி சுரேஷ்

இரட்டை ரோஜா போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்து வருகிறார். 

விக்ரம படத்தில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பொன் ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் ஷிவானி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>