குழந்தைகளின் பயங்களை விரட்டுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சாதிக் கலவரத்தின் போது மனிதர்கள் (மிருகங்கள் போல) ரத்த வெறி பிடித்து ஆயுதங்கள் ஏந்தி தெருக்களில் அலைந்து திரிந்ததையும், பரஸ்பரம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாவதையும் நேரில் பார்த்த குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களது உடலிலும் உள்ளத்திலும் நிரந்தரமான பயமும் பதற்றமும் ஒட்டிக் கொண்டன. அவர்களால் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை; ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதன் பாதிப்பிலிருந்து விடுபடவும் முடியவில்லை. கண்களில் மருட்சி, இருதயத்தில் படபடப்பு, உடலில் நடுக்கம், மனதில் அலை அலையாய் பீதி உணர்வுகள் … இப்படியே குழந்தைகளின் நாட்கள் நகர்ந்தன. சாதி, மதக் கலவரங்களும், யுத்தமும், பெற்றோருக்கிடையில் நடைபெறும் சண்டைகளும் பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சங்களை உடைத்து நொறுக்கி விடுகின்றன. பயம் எனும் நோய் தொற்றிக் கொள்கிறது.

ஒவ்வொரு குழந்தையின் மனவளர்ச்சியிலும் ஒரு பகுதியாக பயம் அல்லது தைரியம் அமைகிறது. மரபுரீதியாகவும், வளர்ப்பு, வாழ்நிலை, சூழ்நிலை காரணமாகவும் குழந்தைகளிடம் பயம் தோன்றி வளர எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளின் மன உலகம் எளிமையானது. மாசு மரு இல்லாதது; மலர் போன்ற மென்மையானது. ஆனால் புற உலகோடு தொடர்பு ஏற்படும் போது பிரச்சினைகளும், முரண்பாடுகளும் தோன்றுகின்றன. அதன் விளைவாக பயமும், பயத்துடன் பதற்றமும் கவலையும் இதர உளவியல் சிக்கல்களும் பிறக்கின்றன.

வயது அதிகரிக்கும் போது பயங்கள் அதிகரிப்பதுண்டு; அல்லது பயங்கள் குறைவதுண்டு. வினோதமான கற்பனைகள் மற்றும் சமுதாய மூடக் கருத்துக்களின் தாக்கம் காரணமாக இருட்டு, பேய், பூதம் சம்பந்தமான பயங்கள் அனைத்து இளம் சிறுவர்களையும் பாதிக்கின்றன. அதிலும் தனிமையில் விடப்படும் குழந்தைகளின் பயங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மேலும் இயற்கையின் சீற்றங்கள், இடி, மின்னல், புயல், நோய்கள், வலிகள், மருத்துவமனைகள், டாக்டர்கள், போலீசார், கோபாவேசப் பெற்றோர், சில மிருகங்கள் குறித்து பல குழந்தைகளிடம் அளவு கடந்த பயம் காணப்படுகின்றன. குழந்தைகளின் வயது, பேசும் திறனுக்கேற்ப பயங்களை வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு பேச இயலாத குழந்தைகள் ஆதரவு நாடுதல், அலறுதல், அழுதல் மூலமும், தப்பித்து ஓடுதல் மூலமும் பயமூட்டும் சூழ்நிலையிலிருந்து வெளியேற முயற்சிக்கின்றனர்.

குழந்தைகளின் பயங்கள் எவை? அவற்றுக்கான காரணங்கள் என்ன? என்பதை அறிந்து பெற்றோர் அறிவுபூர்வமாக, ஆதரவாக குழந்தைகளுக்கு உதவ வேண்டும். மாறாகப் பெற்றோர் தமது பயங்களையும், தவறான நம்பிக்கைகளையும் பிள்ளைகள் மனதில் புகட்டினால் எவ்வளவு அறிவுள்ள குழந்தையாக இருந்தாலும் பயம் காரணமாக குடத்திலிட்ட விளக்காகக் குன்றி விடுவார்கள்.

ஹோமியோபதி, மலர்மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகளில் பயம், அதிர்ச்சி, பீதி, குழப்பம், தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்ற பல மனப் பிரச்சினைகளுக்கு இனிய தீர்வுகள் உள்ளன. 80 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பாச் அவர்களின் மலர் மருத்துவமும், 200 ஆண்டுகளுக்கும்  மேலாக டாக்டர் ஹானிமன் அவர்களின் ஹோமியோபதி மருத்துவமும் எண்ணற்ற உளவியல் பிரச்னைகளைத் தீர்த்து நலமளிப்பதில் தமது ஆற்றலை நிரூபித்துள்ளன.

ஹோமியோபதியில் கீழ்க்கண்டவாறு பயம் சார்ந்த குறிகளின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுகின்றன.

பயமும் பதற்றமும் – ஆர்ஸ் ஆல்ப்

இரவில் தனிமையில் பயம் – ஸ்டிரமோனியம்

கூட்டத்தைக் கண்டால் பயம் – அகோனைட்

பொது இடங்களுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்ல பயம் – ஜெல்சிமியம்

அடைக்கப்பட்ட வாகனத்திற்குள் பயணிக்கப் பயம் – சிமிசிஃபூகா

பட்டாசு வெடிச் சத்தங்களால் பயம் – லாக்கானினம்

இருட்டு பயம் – ஸ்டிரமோனியம்

தனிமையிலிருக்கும் போது சாவு பயம் – ஆர்ஸ் ஆல்ப்

தோல்வியை எண்ணி பயம் – சோரினம்

ஆவிகள், பேய்கள் குறித்து பயம் – ஸ்டிரமோனியம்

உயரமான இடங்களில் பயம் – அர்ஜெண்டம் நைட்

கத்தியைக் கண்டு பயம் – அலுமினா

மின்னலைக் கண்டு பயம் – அகோனைட்

கூரிய பொருட்கள், ஊசிகள் மீது பயம் – ஹையாசியாமஸ்

மழையைக் கண்டு அச்சம் – எலாப்ஸ்

எலிகளைக் கண்டு பயம் – சிமிசிஃபூகா

அன்னியர்களைக் கண்டு பயம் – பரிடாகார்ப்

மோசமான செய்திகள் மீது பயம் – சோரினம்

தண்ணீரைக் கண்டு பயம் – லைசின்

அந்தி நேரம் பயம் – கல்கேரியா கார்ப்

காற்றைக் கண்டு பயம் – சாமோமில்லா

நாய்கள் மீது பயம் – ஸ்டிரமோனியம்   

விழுந்து விடுவோம் என்ற பயம் – ஜெல்சிமியம்

கீழிறங்குவதால், கீழிறங்கும் அசைவுகளால் பயம் – போராக்ஸ்

பலவித கற்பனையான பயங்கள் – பெல்லடோனா

குறுகலான தெரு, இடம் கண்டு பயம் – அர்ஜெண்டம் நைட்

போன் மணி ஓசை கேட்டு பயம் – விஸ்கம் ஆல்பம்  

அழைப்பு மணி எழுப்பும் ஓசை கேட்டு பயம் – லைக்கோபோடியம்

நிழலைக் கண்டு பயம் – கல்கேரியா கார்ப்

Dr.S.வெங்கடாசலம்,  

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.  

செல் – 94431 45700 / Mail – alltmed@gmail.com

<!–

–>