கேரளத்தில் புதிதாக 23,260 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (செப்.17) அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,260 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 131 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 23,260 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

இதையும் படிக்க |  எடப்பாடி பழனிச்சாமியுடன் எல்.முருகன், அண்ணாமலை சந்திப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 20,388 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,56,697-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 131 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 23,296-ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 1,88,926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>