'கோலங்கள்' திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் புதிய தொடர்

தேவையானி முதன்மை வேடத்தில் நடித்த கோலங்கள் தொடர் சன் டிவியில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பானது. திருச்செல்வம் இயக்கிய இந்தத் தொடர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு திருச்செல்வம் இயக்கியுள்ள தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் வருகிற 7 ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. 

இதையும் படிக்க | இயக்குநர் ராம் – நிவின் பாலியின் படப்பிடிப்பில் மிஷ்கின்: வைரலாகும் புகைப்படங்கள்

இந்தத் தொடர் நாச்சியப்பன் என்ற அப்பாவுக்கும், ஜனனி என்கிற மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம்தான் இந்தத் தொடரின் கதை. இந்த எதிர்நீச்சல் தொடரின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரமோவில் இயக்குநர் திருச்செல்வம் தனது மகளின் நலனுக்காக போராடும் அப்பா பற்றிய கதைதான் இந்த எதிர்நீச்சல் என்று பேசுகிறார். இந்தத் தொடரும் கோலங்கள் தொடர் போல பெரும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>