‘சசிகலாவிற்கு திமுக உதவி செய்கிறது’: அதிமுக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திமுகவிற்கு உதவும் வகையில் சசிகலா செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க | கேரள நிலச்சரிவில் சிக்கி 42 பேர் பலி: பினராயி அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியேற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் எம்ஜிஆர் நினைவில்லத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பைக் கிளப்பியது. 

இந்நிலையில் சசிகலாவிற்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகாரளித்தார்.

இதையும் படிக்க | புதிதாக கேரள மாநில விருதுகள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுவெளியில் அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயன்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், “அதிமுக பொதுச்செயலாளர் எனக் கல்வெட்டு திறந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் சசிகலா செயல்பட்டு வருகிறார். திட்டமிட்டு சட்டத்தை மதிக்காமல் உள்நோக்கத்துடன் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. சசிகலாவிற்கு திமுக உதவி செய்கிறது” என ஜெயக்குமார் குற்றம் சுமத்தினார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>