சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படத்திற்கு காமன் மேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதையும் படிக்க | ‘ராக்கி’ படம் எப்படி இருக்கிறது?: இவ்வளவு வன்முறை தேவையா? -திரைவிமர்சனம்

நடிகர் விக்கிராந்த், ஹரிப்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் வகையில் உருவாகிவரும் இந்தப் படமானது அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வியாழக்கிழமை வெளியானது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>