'சமந்தாவின் நடனத்தால் சூடாகவிருக்கும் குளிர் காலம்': அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பாடல் பற்றிய தகவல்

 

நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்தப் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதில், இந்த குளிர்காலம் சமந்தாவின் நடனத்தால் சூடாகப்போகிறது. புஷ்பா படத்தில் இருந்து ஓ சொல்றியா ஓஓ சொல்றியா பாடல் நாளை (டிசம்பர் 10) வெளியாகவிருக்கிறது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ உருவாகும் விதம்: விடியோ வெளியிட்ட ரஹ்மான்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>