சர்ச்சைக்குள்ளான 'புஷ்பா' பட காதல் காட்சி: ரசிகர்களின் எதிர்ப்பால் நீக்கம்

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. 

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது. குறிப்பாக ஊ சொல்றியா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் காதல் காட்சி ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

இதையும் படிக்க | சூர்யா – ஜோதிகா இணைந்து வெளியிட்ட துல்கார் சல்மான் பட போஸ்டர்

அல்லு அர்ஜுனும் ராஷ்மிகாவும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பர். அப்போது அல்லு அர்ஜுன் ராஷ்மிகாவின் மேல் கை வைக்க, அதற்கு ராஷ்மிகா கோவப்படுவதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும். அந்தக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பால், அதனை படக்குழு நீக்கியுள்ளதாம்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>