சர்தாரில் காவலர், வயதானவர் என இரட்டை வேடங்களில் கார்த்தி: இயக்குநர் பகிர்ந்த விடியோ

பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு சர்தார் என்ற படத்தில் கார்த்தி நடித்து வந்தார். சில காரணங்களால் இந்தப் படம் பாதியில் நின்றது. அதன் பிறகு துவங்கிய விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றது. 

இந்த நிலையில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக இயக்குநர் பிஎஸ் மிதர்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் பி.எஸ்.மித்ரன், நடிகர் கார்த்தியிடம் காட்சியை விளக்கிக்கொண்டிருக்கிறார். இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்குவதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க | பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் முடக்கம்

இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரி, வயதானவர் என கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>