சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிரபல பாகிஸ்தான் வீரர்

 

பிரபல பாகிஸ்தான் வீரரான முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

41 வயது ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 2003 முதல் விளையாடி வருகிறார். 55 டெஸ்டுகள், 218 ஒருநாள், 119 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். டெஸ்டில் 10 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்களும் எடுத்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார். டெஸ்டில் இருந்து டிசம்பர் 2018-ல் ஓய்வு பெற்ற ஹபீஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு தேர்வாகவில்லை.  ஆட்ட நாயகன் விருதை 32 முறை பெற்றுள்ளார். பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாகவும் செய்யப்பட்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>