சல்மான் கானை பாம்பு கடித்தது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர், நேற்றிரவு மும்பையில் உள்ள தனது பன்வெல் பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது அதிகாலை 3.30 மணியளவில் இவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர், அருகிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிக்க- கெங்கவல்லியில் ஆற்றின் நடுவே ரூ.2 லட்சம் சொந்த செலவில் தற்காலிக பாலம் அமைத்த மக்கள்

அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். சல்மான் கானை கடித்த பாம்பு விஷமற்றது என்பதால் அவருக்கு பெரியளவில் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு, சல்மான் கான் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 
தற்போது அவர் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் கானை பாம்பு கடித்த சம்பவம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>