சாக்லேட் சாப்பிட்டா பல் சொத்தை ஆயிடும்

Sugar_Children

இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையா அல்லது சும்மா குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட கதையா?
 
கதையா, உண்மையானு இங்கே இப்போ பார்த்துடலாம்.
 
பற்குழிகள் எதனால் உருவாகின்றன?
 
வாயில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்களால் உருவாகின்றன.
 
நமது வாயில் பாக்டீரியாக்கள் எப்படி உற்பத்தியாகின்றன?
 
நாவுக்கு  ருசியாக வாரம்முழுவதும் முறை வைத்துக்கொண்டு சாதாரண இட்லி, தோசை, பொங்கலில் ஆரம்பித்து சிக்கன், மட்டன், முட்டை
பிரயாணிகள், மசாலா அதிகம் சேர்த்த சுவையான  கிரேவிகள், சிக்கன் பிரை, மட்டன் பிரை, முட்டை பொடிமாஸ், ஆம்லேட். ஆஃபாயில். இடைவேளைகளில் கரகர மொறு மொறு ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் இரவுக்கு பரோட்டா, சப்பாத்தி, ப்ரெட், பட்டர் என்று அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வகை வகையாகத் தின்று கொண்டிருக்கிறோம்.
 
இந்த உணவுப் பொருட்கள் தான் வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்திக்கு மூல காரணங்கள். இப்படி உருவாகும் பாக்டீரியாக்களின் முக்கிய உணவுப் பொருள் கார்போஹைட்ரேட்டுகள். இந்த கார்போஹைட்ரேட்டுகள் அதிகமிருப்பது சாக்லேட், கேக், மிட்டாய்கள் மற்றுமுள்ள அனைத்து இனிப்பு வகைகளிலும் தான்.அந்த வகையில் இனிப்பு அதிகம் சாப்பிட்டால் அதை நமது வாயிலும் பற்களிலும் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உட்கொண்டு செழித்து வளர்கின்றன .இந்த பாக்டீரியாக்கள் சும்மா இருப்பதில்லை,அமிலங்களை சுரக்கின்றன.இந்த அமிலங்கள் பற்களின் இனாமல்களுக்கு மிகப் பெரிய எதிரிகள். பல் இனாமல் பாதிப்படைந்தால் என்ன ஆகும்? பற்குழிகள் உண்டாகும்? இப்படி உருவாகும் பற்குழிகள் நாளடைவில் பற்கள் சொத்தையாக முக்கியக் காரணங்களாகி விடுகின்றன. ஆக இப்படி உருவானவையே  இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பற்கள் சொத்தையாகும்” என்ற பொது மொழி.
 
இதற்கென்ன தீர்வு:

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது பெரியோர் வாக்கு,அதற்கேற்ப அளவாக இனிப்பு சாப்பிடலாம் அப்படியே ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இனிப்பு அதிகம் சாப்பிட வேண்டியதாகி விட்டாலும் அப்போதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் காலையில் எழும் போதும் இரவு தூங்கப் போகும் முன்பும் தினமும் இருமுறை பற்களை விளக்கும் பழக்கத்தை  எக்காரணம் கொண்டும் மறக்கக்கூடாது. அதே சமயம் கிரீம்கள் நிறைந்த கேக்குகள்,ஐஸ்க்ரீம் கல் சாப்பிடும் போது இரவு பல் விளக்கிக்கொள்ளலாம் என்று வாய் கொப்பளிக்கும் பழக்கத்தையும்  தவிர்க்கக் கூடாது.இவை இரண்டும் வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் பொதுவான விதிகள். இந்த விதிகளைப் பின்பற்றி மேலே சொல்லப்பட்ட “இனிப்பு அதிகம் சாப்பிட்டா பற்கள் சொத்தையாகும்” என்ற கூற்றை பொய்யாக்குவோம்

<!–

–>