''சாதனைகளை முறியடிக்கட்டும்'' – சிம்புவின் 'மாநாடு' படம் குறித்து சூர்யா கருத்து

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து இன்று வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. 

தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக இந்தப் படம் வெளியாவது சிரமம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அறிவித்தபடி இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, எங்கள் நேரம் துவங்கியது. ‘மாநாடு’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிம்புவின் ரசிகர்களுக்கு நன்றி. மேலும் எங்களுடன் நின்ற நலம் விரும்பிகள் மற்றும் திரைத்துறையினருக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

அதனைப் பகிர்ந்த நடிகர் சூர்யா, வாழ்த்துகள். படம் சாதனைகளை முறியடித்து வெற்றிபெறட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நடிகர் சூர்யாவுக்கு சிம்பு ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>