சாய்னாவிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் சித்தார்த்

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் கடிதம் வாயிலாக மன்னிப்பு கோரினார்.

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றபோது கடந்த 5-ஆம் தேதி பாதுகாப்பு குறைபாடு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டார். 

இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இது குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் பதிவில், எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு நேரிட்ட பாதுகாப்பு குறைபாட்டை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்து சர்ச்சைக்குரிய வகையில் பொருள்கொள்ளும்படி நடிகர் சித்தார்த் சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. 

இதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் தன்னுடைய சுட்டுரைப் பதிவுக்காக மன்னிப்பு கோரி சாய்னா நேவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த மோசமான நகைச்சுவைக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 

நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. 

என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்சொடர் உள்ளது. எனவே, அந்த நகைச்சுவைக்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் என்றுமே எனது சாம்பியன் தான் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>