சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் ஆபாச பதிவு? வலுக்கும் எதிர்ப்பு

நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக நிகழ்வுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.                                                                                                                
இந்த நிலையில் பஞ்சாப் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ஆதரவாக இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நோவால் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளால் நான் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டு சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க | ‘நடிகர் அஜித்துக்கு நன்றி’: இயக்குநர் சிவாவின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

அதற்கு பதிலளிக்கும் சித்தார்த்தின் பதிவு பாலியல் ரீதீயாக சாய்னாவை இழிவுபடுத்துவதாக கண்டனம் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக பாடகி சின்மயி, குஷ்பு போன்றவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>