சிக்கலில் ’சிக்னல்’ செயலி

செய்திகளைப் பரிமாறும் செயலிகளில் ஒன்றான ‘சிக்னல்’ செயலி நேற்று(செப்-26) செயலிழந்ததைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமையும் அதன் செயல்தளம் முடங்கியிருக்கிறது.

தொழில்நுட்பக் காரணங்களால் சில சமயங்களில் செயலிகள் செயலிழப்பது வாடிக்கையானது தான் என்றாலும் ‘சிக்னல்’ போன்ற பிரபல செயலிகளின் பயன்பாடு அதிகம் என்பதால் பயனாளர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

இதையும் படிக்க | நீட், டாஸ்மாக் எதிரான போராட்டம்: 868 வழக்குகளை ரத்து செய்தார் முதல்வர்

இதுகுறித்து சிக்னல் தரப்பில் , ‘ வாடிக்கையாளர்கள் சிறிது நேரம் காத்திருங்கள். தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

செய்திகள் மட்டுமல்லால் புகைப்படங்கள் , விடியோக்கள் , குரல் வழிப் பதிவுகள் எனப் பல வசதிகளை சிக்னல் செயலி கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வரும் இச்செயலி நேற்று முதல் இந்தியா , அமெரிக்கா , ஜெர்மனி , நியூசிலாந்து , பிரேசில் மற்றும் பல்வேறு நாடுகளில் செயலிழக்கத் தொடங்கியது.

இந்நிலையில் விரைவில் பழைய நிலைக்கு சிக்னல் திரும்பும் என பயனாளர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>