சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

g
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 30-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. 

நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் பருவத் தேர்வு டிசம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

படிக்க12 மாவட்டங்களில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’: அமைச்சர்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு டிசம்பர் 1 முதல் 22-ஆம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெறுகிறது.

நடப்பு கல்வியாண்டில் மாநிலக் கல்வியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் முதல் பருவத் தேர்வுகளுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>