சிம்புவின் 'கொரோனா குமார்' படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனையடுத்து கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். 

இந்தப் படம் கோகுல் இயக்கிய ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைப் போல நகைச்சுவை படமாக உருவாக விருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ‘மாநகரம்’ பட இசையமைப்பாளர் ஜாவித் ரியாஷ் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | மீண்டும் ‘துப்பறிவாளன் 2’ – விஷால் பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐபிஎல் போட்டியின் போது இந்தப் படத்தின் சார்பாக வெளியிடப்பட்ட சிஎஸ்கே சிங்கங்களா என்ற பாடலுக்கும் ஜாவித் ரியாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தததும் சிம்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>